ஜெய் பீம் படம் பார்த்து நடிகர் சூர்யாவையும், இயக்குநரையும் மனதார பாராட்டிய தோழர் நல்லக்கண்ணு

Suriya JaiBhim Nallakannu
By Irumporai Nov 26, 2021 07:12 AM GMT
Report

நடிகர் சூர்யா,ஞானவேலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு பாராட்டு ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, லிஜோமோல் ஜோஸ்,மணிகண்டன்,ரஜீஷா விஜயன்,பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் நவம்பர் 2-ம் தேதி வெளியான திரைப்படம் ஜெய் பீம்.

நேரடியாக OTT தளமான அமேசான் ப்ரைமில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இந்திய அளவில் பேசப்படும் படமாக மாறியுள்ளது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்திய நீதித்துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினரிடமிருந்தும் வன்னியர் சமூகத்தினரிடம் இருந்தும் பலத்த எதிர்ப்புகள் இன்றுவரையும் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது.

படத்தில் வன்னியர் சமூகத்தினரை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது என குற்றம் சாட்டும் சிலர் படத்திற்கு தங்களின் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவிடம் நஷ்ட ஈடு கேட்டும் வன்னியர் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெய் பீம் படத்தை சமீபத்தில் பார்த்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலை மனமார பாராட்டியுள்ளார் , இந்த புகைப்படம்  சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.