தகைசால் தமிழர்! நல்லகண்ணு உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் ஒப்படைப்பு

By Fathima Feb 26, 2026 04:09 AM GMT
Report

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் சென்னை மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்படவுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த மூத்தலைவர் நல்லகண்ணு நேற்று மதியம் காலமானார்.

தொடர்ந்து அவரது உடல் பதப்படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தகைசால் தமிழர்! நல்லகண்ணு உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் ஒப்படைப்பு | Nallakannu Demise Details Update

அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதிவரை மீசை வளர்க்காத நல்லகண்ணு - பின்னணியில் உள்ள சோகக்கதை

இறுதிவரை மீசை வளர்க்காத நல்லகண்ணு - பின்னணியில் உள்ள சோகக்கதை


தவெக தலைவர் விஜய், நடிகர்கள் நாசர், சத்யராஜ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பா.ரஞ்சித், வெற்றி மாறன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் என பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தோழர் நல்லகண்ணு மரணம்: தலைவர்கள் இரங்கல்

தோழர் நல்லகண்ணு மரணம்: தலைவர்கள் இரங்கல்


தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற தகைசால் தமிழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன்படி இன்று முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் சென்னை மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்படவுள்ளது.