மத்திய அமைச்சராகும் அண்ணாமலை.. அடுத்த மாநில தலைவர் நானா? நயினார் நாகேந்திரன் பதில்!

Tamil nadu BJP K. Annamalai
By Karthikraja Jun 08, 2024 09:19 AM GMT
Report

தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவீர்களா என்ற கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

அண்ணாமலை

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து 3 வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும், தமிழ்நாட்டில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை.

annamalai bjp

இந்நிலையில், மோடியின் அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக ஆக்கப்பட்ட பின் அவருடைய மாநில தலைவர் பதவிக்கு அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அண்ணாமலை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டால் புதிய பாஜக தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

நயினார் நாகேந்திரன்

இதில், நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்கே வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், "தமிழ்நாட்டில் தனிப்பட்ட முறையில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. 

nainar nagendran

பாஜக வேட்பாளர்கள் மொத்தமாக சுமார் 50 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளனர். இதன் மூலமாக சுமார் 11.24 சதவிகித வாக்குகளை பெற்று தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. அதேபோல் பாஜகவில் அனைவரும் இணைந்து வெற்றிக்காக பணியாற்றினோம்.

இதனால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். னெனில் 2019 ல் நாங்கள் கூட்டணி வைத்தும் தோல்வியடைந்தோம். அதேபோல் தமிழ்நாடு பாஜகவில் நடக்கும் மாற்றங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுகுறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.