பாஜக-தவெக கூட்டணி? உறுதிசெய்த நயினார் நாகேந்திரன்
பாஜக-தவெக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
பாஜக-தவெக கூட்டணி
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தலைவராக பொறுப்பேற்ற பின் முதல்முறை டெல்லி சென்றார்.
அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக அமைப்பு செயலாளர் எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது நயினார் நாகேந்திரன் பிரதமருக்கு சால்வை அணிவித்து ஜல்லிக்கட்டு சிலையை பரிசாக வழங்கியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் பேட்டி
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு நடப்பதாக எனக்குத் தெரியவில்லை.
நேற்று தான் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துவிட்டு, இன்று அம்மாளை தரிசிக்க வந்துள்ளேன். நாளை கோட்டையில் சந்திப்போம். திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்.
தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் பணியை அவர்கள் ஆரம்பித்து இருக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.