அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் பிரேமலதா? விஜய பிரபாகருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி

ADMK DMDK Dharmapuri Premalatha Vijayakanth
By Sumathi Apr 30, 2025 06:06 AM GMT
Report

தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுக்குழு கூட்டம் 

தருமபுரி, பாலக்கோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

vijaya prabhakar - premalatha vijayakanth

இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

பாஜக கூட்டணிக்கு பம்மிய பழனிசாமி; அதற்கு மகனே சாட்சி - ஆர்.எஸ்.பாரதி

பாஜக கூட்டணிக்கு பம்மிய பழனிசாமி; அதற்கு மகனே சாட்சி - ஆர்.எஸ்.பாரதி

 

அதிமுகவுடன் கூட்டணி?

இந்நிலையில், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் இளைஞர்அணி செயலாளராக இருந்து வந்த எல்.கே.சுதீஷ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் பிரேமலதா? விஜய பிரபாகருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி | Vijaya Prabhakar Posting Dmdk Alliance Admk

தேமுதிக அவைத்தலைவர் வி.இளங்கோவன், தேமுதிக தலைமை நிலையச் செயலாளராக பார்த்தசாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தற்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணியில் இணைவது பற்றியும் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.