வெடித்த வன்முறை; பயங்கர மோதல் - நகர் முழுவதும் 144 தடை உத்தரவு!
நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெடித்த வன்முறை
மகாராஷ்டிரா, குல்தாபாத்தில் உள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததாக வதந்திகள் பரவின. இதுகுறித்த வீடியோக்களும் பரவிய நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கூடி போராட்டம் நடத்தினர்.
144 தடை உத்தரவு
பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது கற்களை வீசினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், அங்கு வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஔவுரங்கசீப் கல்லறையை சுற்றி 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.