போன் பேசிக்கொண்டிருந்த தந்தை .. திடீரென வந்த கார் -துடிதுடித்து பலியான 5 வயது சிறுவன்!

Viral Video Maharashtra Crime Death
By Vidhya Senthil Feb 08, 2025 12:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  தந்தை கண்முன்னே சிறுவனின் காரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று தந்தையுடன், 5 வயது சிறுவன் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது கார் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு வந்துள்ளனர்.

போன் பேசிக்கொண்டிருந்த தந்தை .. திடீரென வந்த கார் -துடிதுடித்து பலியான 5 வயது சிறுவன்! | Nagpur 5 Year Old Boy Dies Car Accident

அப்போது அந்த இடத்திற்கு கார் ஒன்று பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளது. இதனை அறியாத சிறுவன் தந்தை செல்போனில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கார் வரும் திசையை நோக்கி ஓடி வந்துள்ளார். இதில் காரின் சக்கரத்தின் நடுவில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார்.

சுதந்திரமாக வாழ அனுமதிக்கவில்லை.. தந்தையை வெட்டிக் கொன்ற மருத்துவ மாணவர் - வெறிச்செயல்!

சுதந்திரமாக வாழ அனுமதிக்கவில்லை.. தந்தையை வெட்டிக் கொன்ற மருத்துவ மாணவர் - வெறிச்செயல்!

உயிரிழந்த சம்பவம்

இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

போன் பேசிக்கொண்டிருந்த தந்தை .. திடீரென வந்த கார் -துடிதுடித்து பலியான 5 வயது சிறுவன்! | Nagpur 5 Year Old Boy Dies Car Accident

விசாரணையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவன் தனது தந்தையுடன் இருந்தபோது, திடீரென ஓடி வரவே அப்போது காரும் வந்ததால், அதன் சக்கரத்தில் சிக்கிய காட்சிகள் பதிவாகி உள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.