ஹோட்டலில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. மாடியிலிருந்து குதித்த சம்பவம் - பகீர் பின்னணி!

Sexual harassment Kerala Crime
By Vidhya Senthil Feb 06, 2025 10:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது இளம் பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் முக்கோம் பகுதியில் தேவதாஸ் என்பவர் உயர்தர ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

ஹோட்டலில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. மாடியிலிருந்து குதித்த சம்பவம் - பகீர் பின்னணி! | Horrific Incident Kerala Girl Jump Off First Floor

இந்த நிலையில் சம்பவத்தன்று,ஹோட்டல் உரிமையாளர் தேவதாஸ், ஹோட்டலில் பணியாற்றும் ரியாஸ் மற்றும் சுரேஷ் ஆகிய மூன்று பேர் சேர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் மாடியிலிருந்து குதித்துள்ளார்.

கட்டாயப்படுத்தி உடலுறவு.. காதலன் கழுத்தை நெரித்துக் கொலை.. காதலி பகீர் வாக்குமூலம்!

கட்டாயப்படுத்தி உடலுறவு.. காதலன் கழுத்தை நெரித்துக் கொலை.. காதலி பகீர் வாக்குமூலம்!

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்புப் பகுதி, முதுகுத்தண்டு உள்ளிட்ட இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

  பாலியல் வன்கொடுமை

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் தன்னை விட்டுவிடும்படி இளம்பெண் கதறுவது மொபைலில் பதிவாகி உள்ளது. இதன் வீடியோவே தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டலில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. மாடியிலிருந்து குதித்த சம்பவம் - பகீர் பின்னணி! | Horrific Incident Kerala Girl Jump Off First Floor

மேலும் குற்றவாளிகளுள் ஒருவரான ஹோட்டல் உரிமையாளர் தேவதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ரியாஸ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.