48 வயசு வந்துருச்சு..ஆனாலும் இன்னும் அந்த ஆசை இருக்கு..? வெளிப்படையாக சொன்ன நக்மா..!
முன்னணி நடிகையாக இந்திய மொழி படங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்திய நக்மா தற்போது அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.
நக்மா
90-களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நக்மா. காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நக்மா அப்படத்தை தொடர்ந்து ரஜினியுடன் பாட்ஷா, சத்யராஜுடன் வில்லாதி வில்லன், பிரபுதேவாவுடன் லவ் பேர்ட்ஸ், கார்த்திக்குடன் மேட்டுக்குடி, பிஸ்தா போன்ற பிளாக்பாஸ்டர் படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

தமிழை மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி என பல மொழி படங்களில் நடித்துள்ள நக்மா கடைசியாக தமிழில் அஜித்தின் "சிட்டிசன்" படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திருமண ஆசை
கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைத்து பிறகு, 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீரத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
48 வயதாகும் நிலையில், தற்போதும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்த்து வருகின்றார் நக்மா. நக்மா திருமண - குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், தற்போது தனக்கு 48 வயதாகும் நிலையில், தான் திருமண செய்யவேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை என கூறினார். ஆனால், தனக்கும் திருமணம் - குழந்தை என வாழ ஆசை இருப்பதாக தெரிவித்த நக்மா, இனியாவது அப்படி ஒரு வாழ்க்கை அமைகிறதா என்று பார்ப்போம் என்று கூறி, தனக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் தான் இப்போதும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
You May Like This Video
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan