அந்த கிரிக்கெட்டருடன் உறவில் இருந்தேன்...ஆனாலும்?..ஓப்பனாக சொன்ன நக்மா...!!

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகை நக்மா தான் கிரிக்கெட்டருடன் காதலில் இருந்தது குறித்தும் ஆனால் அது ஏன் கைகூடவில்லை என்பது குறித்தும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகை நக்மா
90-களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நக்மா. காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நக்மா தொடர்ந்து பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பிஸ்தா போன்ற பிளாக்பாஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.
தமிழை கடந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி என பல மொழி படங்களில் நடித்துள்ள நக்மா பின்னர் கடைசியாக நடிகர் அஜித்தின் "சிட்டிசன்" படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கிரிக்கெட்டருடன் தொடர்பு
2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மிகவும் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்டது இந்திய கேப்டன் கங்குலி மற்றும் நடிகை நக்மா இடையில் இருந்த உறவை பற்றித்தான். அப்போதைய நாளிதழ்களில் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
இது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த நக்மா, கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை பின்னடவை சந்தித்திருந்த நிலையில், அவரின் தோல்விக்கு தன்னுடனான பழக்கமே காரணம் என சொல்லப்பட்டதாக குறிப்பிட்ட நக்மா, இருவரின் பழக்கமும் யாருடைய வாழ்க்கையையும் பதித்திடக்கூடாது என்பதற்காக பிரிந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
You May Like This Video