அந்த தொல்லையில் இருந்து தப்பிக்க சரத்குமாருடன் காதலில் விழுந்த நக்மா - ஆனால் கடைசியில்...
நடிகை நக்மா குறித்த பல தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளது.
நடிகை நக்மா
90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா. காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நக்மா தொடர்ந்து பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பிஸ்தா போன்ற பிளாக்பாஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி என பல மொழி படங்களில் நடித்துள்ள நக்மா பின்னர் கடைசியாக நடிகர் அஜித்தின் "சிட்டிசன்" படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
48 வயதாகும் நிலையில், தற்போதும் திருமணமாகாமல் வாழ்த்து வருகின்றார். முன்னதாக சரத்குமாரின் ஹீரோயினாக நடித்தவர் நக்மா. இதனால் இருவரும் நெருக்கம் அடைந்தார்கள். அந்த காலத்தில் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல வதந்திகள் வந்தன.
பரவிய கிசுகிசு
அதனாலேயே, சரத்குமார் முதல் மனைவியான சாயா தேவியை பிரிந்ததாகக் கூறப்படுகிறது. திருமணம் முறிந்த நிலையில் நக்மாவை திருமணம் செய்ய சரத்குமார் விரும்பினார்.

ஆனால், அவர்களின் காதல் முறிந்தது. நடிகைகளுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை கொடுப்பது பெரும்பாலும் நடந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரும்பாலான நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நட்பாக பழக ஆரம்பித்தனர். பல நடிகைகள் காதல் வயப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.