மக்களே உஷார்..!ஒரே ஒரு போன் கால்...ஒரு லட்சத்தை பரிகொடுத்த நடிகை நக்மா?

Nagma Tamil Cinema Mumbai
By Thahir Mar 09, 2023 11:58 AM GMT
Report

நடிகை நக்மாவிடம் செல்போனில் பேசிய மர்ம நபர் ஒரு லட்சத்தை அபேஸ் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் என்ட்ரி 

1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா.இவர் நடிகை நக்மாவின் சகோதரி ஆவார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கரின் காதலன், பாட்ஷா உள்ளிட்ட படங்களில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர்.

nagma-says-about-how-rs-1-lakh-stolen-account

தற்போது 48 வயதாகவும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் இவர் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரசில் இணைந்த நக்மா 

இவர் முதலில் அரசியலுக்கு வரும் போது அவர் பாஜகவில் இணைவார் என்றும் ஹைதராபாத் தொகுதியில் 2004 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நக்மா தான் வேட்பாளர் என்றும் சொல்லப்பட்டது.

அதை தவிடு பொடியாக்கிய நக்மா அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மீரட் எம்பி தொகுதியில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் 42,911 வாக்குகளை பெற்று 4வது இடத்தை பெற்றார். அவருடைய டெபாசிட்டையும் இழந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் நக்மாவிடம் இருந்து வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

nagma-says-about-how-rs-1-lakh-stolen-account

நடிகை நக்மாவின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை கிளிக் செய்தவுடன் அவருக்கு யாரோ ஒரு மர்ம நபர் போன் செய்துள்ளார்.

அப்போது பேசிய அந்த மர்ம நபர் தன்னை வங்கி அலுவலர் என அறிமுகப்படுத்தி வங்கியின் கேஒய்சி புதுப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பேசிக் கொண்டிருந்த போதே நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நக்மா மும்பையில் உள்ள சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

பெரும் தொகை தப்பியது - நக்மா நிம்மதி 

இதுகுறித்து நக்மா கூறுகையில் எனக்கு நிறைய மெசேஜ் வந்தனர். அந்த மெசேஜில் கொடுக்கப்பட்ட லிங்கில் கேட்கப்பட்ட எந்த விவரங்களையும் நான் கொடுக்கவில்லை. ஆனாலும் செல்போனில் பேசிய நபர் கேஒய்சி புதுப்பித்து தருவதாக கூறி இன்டெர்நெட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளார்.

நல்ல வேலை பெருசா போகலை என தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் நடிகை நக்மாவின் போனுக்கு 20க்கும் மேற்பட்ட ஓடிபிக்கள் அனுப்பப்பட்டன.ஆனால் அந்த ஓடிபிக்களை நக்மா பகிராமல் இருந்ததால் பெரும் தொகை தப்பியுள்ளது.

மும்பையில் கடந்த சில நாட்களாக இது போன்ற மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுரை 80 பேரில் வங்கிக் கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வரும் கும்பல் அபேஸ் செய்துள்ளது. இதில் நக்மாவும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.