திடீரென நின்ற பேருந்து; மாணவிகளைக் கொண்டு தள்ளி ஸ்டார்ட் செய்த ஓட்டுநர் - அதிகாரிகள் அதிரடி!
மாணவிகளைக் கொண்டு தள்ளி பேருந்தை ஸ்டார்ட் செய்த சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.
பழுதான பேருந்து
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மணக்குடி கிராமத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. அதில், ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அதிக அளவில் பயணம் செய்தனர்.
பேருந்து கேப் ரோட்டில் பழைய தாலுகா அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பழுதாகி சாலையில் நின்றது. ஓட்டுநர் அந்தப் பேருந்தை இயக்க பலமுறை முயற்சி செய்தும், பலனளிக்கவில்லை.
ஊழியர்கள் சஸ்பெண்ட்
இதனால், பேருந்தில் அமர்ந்திருந்த மாணவிகள் பேருந்தைவிட்டு இறங்கி, அதை தள்ளி இயங்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது தூரம் தள்ளிவிட்டதும் பேருந்து ஸ்டார்ட் ஆனது.
இதையடுத்து, மாணவிகள் மீண்டும் பேருந்தில் ஏறி பயணித்தனர். இதற்கிடையில், பழுதாகி நின்ற பேருந்தை சீருடை அணிந்த கல்லூரி மாணவிகள் தள்ளிய வீடியோ வெளியாகி அதிகம் பகிரப்பட்டது. தொடர்ந்து, ஓட்டுநர் பாபு, நடத்துனர் செல்வராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை எலெக்ட்ரீசியன் வைகுண்ட கிருஷ்ணன், சூப்பர்வைசர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.