டிரைவரே இல்லாமல் 80கி.மீ வேகத்தில் பாயும் பேருந்து - எங்கு தெரியுமா?
உலகின் முதல் தானியங்கி பயணிகள் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தானியங்கி பேருந்து
ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் தானியங்கி பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இவை 22 கி.மீ தூரம் கொண்ட ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் 80கி.மீ வேகத்தில் இயக்கப்படும். ஒரே வழித்தடத்தில் இதே போல் ஐந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்தில் ஓட்டுநர் இருப்பார்.
AI தொழில்நுட்பம்
ஆனால் அவர் இயக்காமல் பேருந்து தானாகவே இயங்கும். ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் மட்டும் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஓட்டுநர் பேருந்தைக் கையாள்வார். ஆப்டிகல் கேமரா மற்றும் ராடார் பொருத்தப்பட்டுள்ளது.
சாலையில் ஜீப்ரா கிராசிங் போன்றவற்றில் மனிதர்கள் வரும் போது பேருந்தை நிறுத்தவும் முடியும். மேலும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பமும் இந்த பேருந்தில் இருக்கிறது.
இதில் பேருந்தில் நடத்துநரும் இருப்பார், அவர் பயணச் சீட்டு வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்வார். இதற்கான சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து, இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.