மதுவிற்கு ஏடிஎம்? வெட்கக்கேடு - கொந்தளித்த ஈபிஎஸ்!
தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை உடனடியாக கைவிட ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
மது ஏடிஎம்
சென்னை கோயம்பேட்டில் டாஸ்மாக் நிறுவனம் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை தொடங்கியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையை தொடங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வணிக வளாகங்களில் இப்படி மது விற்கப்படுவது என்ன மாதிரியான எண்ணங்களை விதைக்கும் என்ற யோசனை கூட அரசுக்கு இல்லையா?
கண்டனம்
மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வெட்கக்கேடானது .
தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக வரும் செய்திகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.