கல்யாணத்தில் கலந்துக்கொள்ள காசு வாங்கும் பிரபலங்கள் - கொந்தளித்த நாகர்ஜூனா!
திருமணத்தில் கலந்துக்கொள்ள பிரபலங்கள் காசு வாங்குவதாக நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்ச்சி
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்-ன் திருமணம் உலகமே வியக்கும் வண்ணம் கோலகலமாக நடந்து முடிந்தது. இதில், உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர்.
திருமணத்தில் நிகழ்ச்சி நடத்தியவர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என்று அனைவருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.
நாகார்ஜுனா விளாசல்
தமிழ் சினிமாவிலிருந்து ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டோர் குடும்ப சகிதமாக கலந்துகொண்டார்கள். பாலிவுட் திரையுலகமே கலந்துகொண்டது என்றே கூறலாம். இதில், கலந்துகொண்டவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய கை கடிகாரத்தை முகேஷ் அம்பானி பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், நாகார்ஜுனா அளித்த பழைய பேட்டி ஒன்றில், "திருமண விழாக்களில் திரை பிரபலங்கள் கலந்துகொள்வதற்கு பணம் வாங்குகிறார்கள்" என்று கூறியிருக்கிறார். இந்த சமயத்தில் இந்தப் பேட்டி கவனம் பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.