தனுஷ் கண் முன்னே ரசிகருக்கு நேர்ந்த கொடுமை; வலுக்கும் எதிர்ப்பு - மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா

Dhanush Hyderabad Nagarjuna
By Karthikraja Jun 24, 2024 06:15 AM GMT
Karthikraja

Karthikraja

in சினிமா
Report

 விமான நிலையத்தில் வயதான ஒருவர் நாகார்ஜுனா கிட்டே செல்ல முயன்ற போது அவருடைய பாதுகாவலர் தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நாகார்ஜுனா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. தற்போது தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புக்காக ஹைதராபத்திற்கு விமானம் மூலம் தனுஷ், நாகார்ஜுனா நேற்று சென்றார்கள்.

நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் விமான நிலையத்தில் நடந்து செல்லும்போது வயதான ரசிகர் ஒருவர் நாகர்ஜூனாவின் கிட்ட செல்ல முயன்றார். நாகர்ஜூனாவின் அருகில் இருந்த பாதுகாவலர் வயதானவர் என்று கூட பாராமல் கீழே தள்ளிவிட்டார். 

2வது திருமணத்திற்கு பின் பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் நாகார்ஜுனா - பரவும் தகவல்!

2வது திருமணத்திற்கு பின் பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் நாகார்ஜுனா - பரவும் தகவல்!

மன்னிப்பு

நாகர்ஜுனாவும், தனுஷும் இந்த செயலை கண்டுகொள்ளாமல் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விடியோவை பார்த்த பலரும் அவர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் பின் நாகார்ஜுனா நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , ’இப்போதுதான் இது என்னுடைய கவனத்திற்கு வந்தது, கண்டிப்பாக இந்த நிகழ்வு நடந்திருக்கக் கூடாது, அந்த மனிதரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.