நாகை டூ இலங்கை கப்பல்.. நேற்று தொடக்கம், இன்று ரத்து - என்ன காரணம்?
இந்தியாவில் இருந்து இலங்கை செல்லும் கப்பல் போக்குவரத்து நேற்று துவங்கி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து
தமிழ்நாடு நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கை செல்வதற்காக சொகுசு கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி போனது. நேற்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொளி மூலமாக தொடங்கி வைத்தார்.
ரத்து
இந்நிலையில், நாகையில் இருந்து இலங்கை செல்லும் இந்த கப்பல் போக்குவரத்து நேற்று துவங்கியது, அது இன்று ரத்து செய்யப்பட்டது. இதில் போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை காலை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil