சமந்தாவை பிரிந்ததற்கு காரணம் இதுதான் - மனம் திறந்த நாக சைதன்யா!

Vinothini
in பிரபலங்கள்Report this article
நாக சைதன்யா முதன்முறையாக சமந்தாவை விவாகரத்து செய்ததன் காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
கஸ்டடி திரைப்படம்
தெலுங்கு நடிகரான நாக சைதன்யா, தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது தெலுங்கு மற்றும் தமிழில் வருகிற 12 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்திற்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாக சைதன்யா முதன்முறையாக சமந்தாவை விவாகரத்து செய்தது குறித்து பேசியுள்ளார்.
விவாகரத்தின் காரணம்
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "சமந்தா எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் இருவரும் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. சட்டப்படி விவாகரத்து பெற்று ஒரு வருடம் ஆகிறது. நாங்கள் பிரிந்தாலும்கூட சமந்தாவோடு சேர்ந்து வாழ்ந்த நாட்களை கவுரவிக்கிறேன். உண்மையில் சமந்தா மிகவும் நல்ல பெண்.
சமூக வலைத்தளத்தில் வந்த வதந்தி காரணமாகத்தான் எங்கள் இருவர் இடையே பிரச்சினை ஆரம்பம் ஆனது. அது மெல்ல மெல்ல பெரிதாகி கடைசியில் பிரிந்து விட வேண்டிய நிலைமை வந்தது. முதலில் நான் அந்த வதந்தி குறித்து அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன்பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவர்மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம்.
ஆனால் சில ஊடகங்களில் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைக்காமல் இருக்கிறோம் என்று சித்தரித்தது வேதனைப்படுத்தியது. எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மூன்றாவது மனிதரை இதற்குள் இழுத்து அவமரியாதை செய்தனர்.
என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்கிறேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.