சமந்தாவை திருமணம் செய்வதை தவிர வேற வழியில்ல.. நாகசைதன்யா உருக்கம்!
சமந்தா குறித்து அவரது முன்னாள் கணவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
நாக சைதன்யா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் வலம் வர உள்ளார். இந்நிலையில், இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்தார்.
திருமணம்?
நாக சைதன்யாவும், மருத்துவமனையில் சமந்தாவை நேரில் சென்று பார்த்ததாகவும், அவரை போனில் தொடர்புகொண்டு பேசியதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தது. தற்போது, சமந்தாவை திருமணம் செய்தது குறித்து நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்று பேசு பொருளாகியுள்ளது.
அதில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏ மாய சேசாவே படப்பிடிப்பின்பபோது நானும், சமந்தாவும் சந்தித்தோம். 7 ஆண்டுகளாக சமந்தாவை இம்பிரஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவரை திருமணம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றார்.
நோயோடு சமந்தா போராடி வருகையில், நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் வெளிநாட்டில் ஜோடியாக போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.


மாத ஆரம்பத்திலேயே அதிர்ஷ்ட யோகம்! இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்...! இன்றைய ராசி பலன்கள் IBC Tamil
