பார்த்த வரைக்கும் போதும்.. அடுத்த திருமணத்திற்கு ரெடியான நாக சைதன்யா - வெளியான ஷாக் தகவல்!

Samantha Naga Chaitanya Tamil Actors Tamil Actress
By Vinothini Sep 14, 2023 04:30 PM GMT
Report

நடிகர் நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாக சைதன்யா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகை நாகர்ஜுனாவின் மகன். இவர் தனது முதல் படத்தில் நடிகை சமந்தாவுடன் இனைந்து நடித்தார், அதன்பிறகு இருவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

nagachaithanya-ready-for-second-marriage

பின்னர் 2021-ம் ஆண்டு இருவரும் சில காரணங்களால் பிரிந்தனர். மேலும், இவர் விவாகரத்திற்கு பின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா தூளிபாலாவை காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியது, ஆனால் அது உண்மை இல்லை என்று கூறினார்.

திருமணம்

இந்நிலையில், நாகார்ஜுனா தனது மகனை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மணமகள் ஒரு பெரிய வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.

nagachaithanya-ready-for-second-marriage

ஆனால் இது குறித்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் இதுவரை உறுதி செய்யவில்லை. தற்பொழுது இவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக வெளியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.