சமந்தாவின் முன்னாள் கணவர், பிரபல நடிகையுடன் பிரேக்அப்? - ரசிகர்கள் ஷாக்!

Samantha Naga Chaitanya
By Vinothini Jul 05, 2023 11:27 AM GMT
Report

பிரபல நடிகர் நாக சைதன்யா அவரது காதலியுடன் பிரேக்அப் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்  நாக சைதன்யா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகை நாகர்ஜுனாவின் மகன். இவர் தனது முதல் படத்தில் நடிகை சமந்தாவுடன் இனைந்து நடித்தார், அதன்பிறகு இருவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

nagachaithanya-breakup-with-shobitha

பின்னர் 2021-ம் ஆண்டு இருவரும் சில காரணங்களால் பிரிந்தனர். மேலும், இவர் விவாகரத்திற்கு பின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா தூளிபாலாவை காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியது.

பிரேக்அப்

இந்நிலையில், இவர்கள் இருவரும் சமீப காலமாக பார்த்து கொள்வதில்லை என்றும் பேசிக்கொள்வதில்லை என்றும் தெலுங்கு சுற்றுவட்டாரத்தில் பேசி கொள்கின்றனர். அதனால், தற்போது இருவரும் பிரேக்கப் செய்து விட்டு பிரிந்து விட்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

nagachaithanya-breakup-with-shobitha

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. மேலும், இது குறித்து இருவர் தரப்பிலும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.