பிரிந்தாலும் சமந்தாவின் காதலை மறக்காத நாக சைதன்யா - என்ன செய்தார் தெரியுமா?
சமந்தாவை பிரிந்தபோதிலும் நாக சைதன்யா செய்த காரியம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
விண்ணைத் தாண்டி வருவாயா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக அறிவித்தனர்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் சமூக வலைதளங்களில் நாக சைதன்யாவின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார் சமந்தா. ஆனால், சமந்தாவின் புகைப்படங்களை அப்படியே வைத்துள்ளார் அவரது முன்னாள் கணவர்.
ரசிகர்கள் ஆர்வம்
இந்நிலையில், இந்நிலையில் விண்ணைத் தாண்டி வருவாயாவின் தெலுங்கு ரீமேக் ரிலீஸாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடினார்கள். அதனைத் தொடர்ந்து, நாக சைதன்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அந்த படத்தின் பாடல் ஸ்டில்லை வைத்திருந்தார்.
ஜெஸ்ஸி தன்னை காதலித்ததும், பிரேக்கப் செய்து காயப்படுத்தியதும் இன்னும் மறக்கவில்லை என்பது போன்று இருந்தது அவரது பதிவு. இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். மேலும், தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என கவுதம் மேனனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.