படு ரொமான்ஸில் முன்னாள் மனைவி - கடுப்பாகி எழுந்துச் சென்ற நாக சைதன்யா
குஷி திரைப்பட டிரைலரைப் பார்த்து நாக சைதன்யா கடுப்பாகி உள்ளார்.
குஷி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
3 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இவர்கள் மண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் பிரிவதாக இருவரும் அறிவித்தனர். தற்போது இருவரும் தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சைதன்யா அப்செட்
இந்நிலையில், நடிகை சமந்தா நடித்து இருக்கும் குஷி படம் இன்று வெளியானது. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையே ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் அமைந்துள்ளன.
மேலும், தெலுங்கில் "பாய்ஸ் ஹாஸ்டல்" என்ற படத்தை நாக சைதன்யா திரையரங்கிற்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது படத்தின் இடைவேளையில் சமந்தாவின் குஷி படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பட்டு உள்ளது.
இதனால் கடுப்பான நாக சைதன்யா தியேட்டரில் இருந்து வெளியேறி இருக்கிறார். டிரெய்லரைப் பார்த்து வெறுப்பாகி அங்கிருந்து சென்றாரா அல்லது வேறு காரணமாக இருக்குமோ என்ற தகவல் தெரியவில்லை.