விரைவில் திருமணம்.. சமந்தாவால் நாக சைதன்யா சோபிதா இடையே ஏற்பட்ட வாக்குவாதம்?
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இடையே சிறிய வாக்குவாதம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்குவாதம்?
நீண்ட நாட்களாகவே நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபித்தா இருவரும் பழகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தன. அதனை உறுதி செய்யும் விதமாக அண்மையில் இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயத்தார்தம் நடைபெற்றது.
இந்த நிலையில், இருவருக்கும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், அவர்களது திருமணத்திற்கு முன்பே ஜோடிகளுக்கு இடையே சமந்தா விஷயமாக ஒரு சிறிய வாக்குவாதம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தெலுங்கு மீடியாக்கள் சில செய்திகள் வெளியாகின. அதாவது, சோபிதா, நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா வசித்த அதே வீட்டில் காலடி எடுத்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னணி
இந்த வீடு சமந்தாவின் நினைவுகளுடன் தொடர்பு கொண்டிருப்பதால் அங்கு சமந்தா நினைவு தனக்கு வரும் என சோபிதா நினைக்கிறாராம். எனவே அங்கு வசிப்பது தனக்கு பிடிக்கவில்லை என ஷோபிதா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா, சோபிதாவை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
அது தனது வீடு என்பதால், அங்கேயே வசிக்க விரும்புகிறார் என்றும், அது தனது சொந்த வீடுதானே தவிர சமந்தா வீடு இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் சோபிதா தனது முடிவை மாற்றவில்லை. இதனால், இருவரும் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
நாக சைதன்யாவின் தந்தை, நாகார்ஜுனா இந்த விவகாரத்தில் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்ததாகவும் இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.