பக்கத்து வீட்டு பையன் தான்; அந்த நேரத்தில் அப்படி ஒரு கேள்வி கேட்டார் - கணவர் குறித்து நதியா பளீச்!

Nadhiya
By Sumathi Oct 18, 2023 02:30 PM GMT
Report

நடிகை நதியா தனது காதல், திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை நதியா

கடந்த 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா. நடிகர் மோகன் உடன் பாடு நிலாவே, சத்யராஜ், பிரபுதேவாவுடன் சின்ன தம்பி பெரிய தம்பி, ரஜினிகாந்த் உடன் ராஜாதி ராஜா என

நடிகை நதியா

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அண்மையில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா நடித்த LGM படத்தில் நடித்திருந்தார்.

காதல் வாழ்க்கை

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே என்னுடைய கணவரை தெரியும், அவர் எனது வீட்டின் அருகில் தான் இருந்தார்.முதலில் நண்பர்களாகத்தான் இருந்தோம், பின் அது காதலாக மாறியது. எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நான் படங்களில் நடிக்க வந்துவிட்டேன்.

குடும்பம்

அவர் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்தார். அந்த காலத்தில் போன் இல்லாததால், லெட்டர் தான் எழுதுவார் அந்த லெட்டர் அம்மா கையில் மாட்டிக்கொண்ட பின் தான் எங்கள் காதல் விஷயம் எங்கள் வீட்டுக்கு தெரிந்தது. அப்போது என் அப்பா, அவருக்கு வேலை கிடைக்கட்டும் என்று சொன்னார். 

இதனால், அவருக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று காத்துக்கொண்டு இருந்தேன். நான் வேறு மதம். அவர் வேறு மதம். அப்போது, நான் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தததால், என் கணவர் என்னால் குடும்பத்தை நடத்த முடியுமா என்று கேட்டார். நானும் முடியும் என்றேன்.

சிகிச்சையில் பிரபல நடிகை நதியா - ரசிகர்கள் அதிர்ச்சி

சிகிச்சையில் பிரபல நடிகை நதியா - ரசிகர்கள் அதிர்ச்சி

அவருக்கு வேலை கிடைத்ததும் கையில் காசுக்கூட இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். நான் வேறு மதம். அவர் வேறு மதம். எப்படி எங்களுக்குள் ஒத்துவரும் என்று பெற்றோர் கவலைப்பட்டனர். எனது பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதனால் எங்களுடைய காதலுக்கும் கிரீன் சிக்னல் கொடுத்தார்கள் என சுவாரஸ்ய தகவல்கல் பகிர்ந்துள்ளார்.