இலவசமாக டிரைவிங் கத்துக்கலாம்..அரசின் சூப்பர் திட்டம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இலவச டிரைவிங்
கடந்த 2022ம் ஆண்டு தமிழக கல்வித்துறையால் ”நான் முதல்வன்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் வடிவமைக்க வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் கீழ், 45 நாள் இலகுரக வாகனம், கனரக வாகனம் மற்றும் 30 நாள் போர்க்லிப்ட் ஆப்பரேட்டர் ஆகியவற்றில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். எதிர்காலத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் வாகன ஓட்டுனர் வேலை வாய்ப்புகளை பெற இந்த பயிற்சி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
விண்ணப்பம்
தகுதியுள்ள பயனாளிகள் தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, இளங்கலை படிப்பை முடித்த 21 வயது முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
பெற்று தரும் விதமாக 12 மாதம் இன்டர்ன்ஷிப் வாய்ப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதற்கு மாதந்தோறும் ரூ. 5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த இன்டர்ன்ஷிப் பெற பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ, டிப்ளமோ, ஏதேனும் துறைகளில் பட்டம் பெற்று இருந்தால் போதும் விண்னப்பிக்கலாம்.
இதற்கு ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. இது குறித்து மேலும் அறிந்திட www.naanmudhalvan.in.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.