ஜனநாயகம் தழைக்கணும் - அதனால் துணை நிற்கிறேன்!! அதிமுகவிற்கு ஆதரவாக வந்த நா.த.க

Naam tamilar kachchi ADMK Seeman Edappadi K. Palaniswami
By Karthick Jun 27, 2024 10:14 AM GMT
Report

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்திருக்கிறார்.

அதிமுக போராட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக அதிமுகவினர் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது.

edapadi palanisamy admk protest

கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தொடர் முழுவதிலும் அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு.  

இன்று அதிமுகவினர் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதிமுகவுக்கு அதற்கான அவசியமே இல்லை - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

அதிமுகவுக்கு அதற்கான அவசியமே இல்லை - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!


இந்நிலையில் தான், அதிமுகவினரின் போராட்டத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தலைப்பதிவு வருமாறு,

சீமான் ஆதரவு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

Seeman supports admk protest

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும்.

இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.