சின்னத்தை பறிகொடுக்கும் நாதக? கர்நாடக கட்சியால் எழுந்த சிக்கல் - அடுத்த கட்ட நகர்வு என்ன?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கரும்பு விவசாய சின்னம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுளளது. அக்கட்சியின் சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கு தொடருவோம்
மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் பாரதிய பிரஜா ஐக்யதா போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளதாகவும், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.