நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு - முதல்வர் எச்சரித்த அந்த 7 மாவட்ட செயலாளர்கள் யார்..?

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK
By Karthick Oct 02, 2023 03:03 AM GMT
Report

மாவட்ட செயலாளர்களை முதல்வர் எச்சரித்ததாக கூறப்படும் நிலையில், அவர்கள் யார் என்ற தகவல்கள் கசிந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்புகளை கொண்டுள்ளது. மத்திய பாஜக அரசின் முக்கிய தேர்தலாக பார்க்கப்படும் இது காங்கிரஸ் கட்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றேயாகும்.

7-dmk-district-secretaries-whom-stalin-warned

அதே நேரத்தில் மாநிலத்தில் தங்களது பலத்தை நிரூபித்து காட்டிக்கொள்ள மாநில கட்சிகளும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் இந்த தேர்தலை மிகவும் தீவிரமாக கையாண்டு வருகின்றது.

எச்சரித்த முதல்வர்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை பிடித்திருந்த திமுக, இம்முறையும் அதனை மீண்டும் திருப்பி செய்து நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் போக்கில் தற்போதிலிருந்தே பணிகளை துவங்கி விட்டனர்.

7-dmk-district-secretaries-whom-stalin-warned

பிரச்சாரங்கள், கட்சி வேலைகள் என பலவற்றிலும் மும்முரம் காட்டி வரும் சூழலில், தற்போது திமுகவின் தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

யார் அந்த 7 பேர்..?

வரும் நாடளுமன்ற தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால், அந்த மாவட்டத்தின் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என அதிரடியாக எச்சரிக்கை ஒன்றை அவர் விடுத்துள்ளார். மேலும், தேர்தல் பணிகளின் போது சரியாக தொகுதி பார்வையாளர்களுக்கு ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்களும் மாற்றப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

7-dmk-district-secretaries-whom-stalin-warned

அதிலும் குறிப்பாக முதல்வர் 7 பேரை - அதாவது சென்னையை சேர்ந்த ஒருவரையும், தர்மபுரி, கோவை ஈரோடு, சேலம், நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் ஒருவரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதில் சென்னையில் திமுகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.