40 நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்; களமிறங்கும் வீரப்பன் மகள் - எந்த தொகுதியில்?

Naam tamilar kachchi Tamil nadu Seeman Election
By Jiyath Mar 24, 2024 04:10 AM GMT
Report

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உட்பட 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

40 நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்; களமிறங்கும் வீரப்பன் மகள் - எந்த தொகுதியில்? | Naam Tamilar Katchi 40 Constituency Candidates

இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதனிடையே 'கரும்பு விவசாயி' சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உட்பட 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். மேலும், கிருஷ்ணிகிரியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் - தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மக்களவை தேர்தல் - தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

வேட்பாளர்கள்

1. திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர்,

2. வடசென்னை - டாக்டர் அமுதினி

3. தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4. மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்

40 நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்; களமிறங்கும் வீரப்பன் மகள் - எந்த தொகுதியில்? | Naam Tamilar Katchi 40 Constituency Candidates

5. திருப்பெரும்புதூர் - டாக்டர் வெ.ரவிச்சந்திரன்

6. காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார்

7. அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8. வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்

9. தருமபுரி - டாக்டர் கா.அபிநயா

10. திருவண்ணாமலை - டாக்டர் ரா.ரமேஷ்பாபு

11. ஆரணி - டாக்டர் கு.பாக்கியலட்சுமி

12. விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்

13. கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்

14. சேலம் - டாக்டர் க. மனோஜ்குமார்

15. நாமக்கல் - க.கனிமொழி

16. ஈரோடு - டாக்டர் மு.கார்மேகன்

17. திருப்பூர் - மா.கி. சீதாலட்சுமி

18. நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்

19. கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி - டாக்டர் நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் - டாக்டர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் - டாக்டர்ரெ.கருப்பையா

23. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி

25. கடலூர் - வே.மணிவாசகன்

26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை - வி.எழிலரசி

31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி - டாக்டர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் - டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி - டாக்டர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி - பா.சத்யா

38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி - டாக்டர் ரா.மேனகா என மொத்தம் 40 பேர் போட்டியிட உள்ளனர்.