#Breaking - தேர்தல் நேரத்தில் திடீரென மாறிய சீமான் மைக் சின்னம் - புகார் அளித்த நா.த.க
நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளது.
மைக் சின்னம்
தேர்தலை சந்திக்க துவங்கியது முதல் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு - விவசாயி சின்னத்திலேயே போட்டியிட்டது. ஆனால், அது இந்த தேர்தலில் திடீரென மாற்றப்பட்டது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சி தரப்பில் வழக்குகள் தொடுக்கப்படும் பலன் அளிக்காத நிலையில், அக்கட்சி வரும் மக்களவை தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
நா.த.க புகார்
புதிய சின்னம் ஆயினும், நாம் தமிழரின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றார். கிட்டத்தட்ட மக்கள் அவரது சின்னத்தை கவனிக்க துவங்கிய இந்த நேரத்தில், தற்போது தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக நாம் தமிழர் புகார் ஒன்றை அளித்துள்ளது.
வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் சூழலில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்களுக்கு சுவிட்ச் இல்லாத மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் சுவிட்ச் உள்ள சின்னம் ஒட்டப்படுகிறது என புகார் அளித்துள்ளனர்.