104 பயணிகளுடன் சுரங்கப்பாதைக்குள் மறைந்த ரயில் - கடந்த காலத்திற்கு சென்றுவிட்டதா?
கடந்த 1911-ம் ஆண்டு ரயில் ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது.
மர்ம சம்பவம்
இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து கடந்த 1911-ம் ஆண்டு ஜானெட்டி என்ற ரயில் 106 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த ரயில் ஒரு சுரங்கப்பாதைக்குள் நுழைந்தவுடன் காணாமல் போயுள்ளது. சுரங்கப்பாதைக்குள் சென்ற ரயில் மீண்டும் வெளியே வரவில்லை.
தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பின்னரும் அந்த ரயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ரயில் காணாமல் போனதை அடுத்து அதில் பயணித்த 2 பயணிகள் மட்டும் சுரங்கப்பாதைக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டனர் . அவர்கள் இருவரும் சுய நினைவு இன்றி அங்கு தத்தளித்துள்ளனர்.
100 ஆண்டுகள்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "ரயில் சுரங்கப்பாதை அருகே வந்தபோது, அங்கிருந்து மர்மமான புகை வெளியேறியதைக் கண்டதாகவும், அதைத் தொடர்ந்து இருவரும் பயந்து ரயிலில் இருந்து குதித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் தொடர்பாக பல்வேறு வகையான வதந்திகள் பரவி வந்தன.
அதில், இந்த ரயில் காலப்போக்கில் பயணித்து மறைந்து கடந்த காலத்திற்கு சென்றதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரயிலின் சில பாகங்கள் ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனியில் காணப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அவற்றிற்கான ஆதாரம் எதுவுமில்லை. இந்த ஜானெட்டி ரயில் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து காணாமல் போய் 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இதுவரை அந்த சம்பவத்தின் மர்மத்தை கண்டறிய முடியவில்லை.