விண்வெளியில் நடக்கும் வினோதம் - மணிக்கு 1 மில்லயன் மைல் வேகம் நகரும் மர்மப் பொருள்!

United States of America NASA World
By Swetha Aug 19, 2024 07:48 AM GMT
Report

விண்வெளியில் மணிக்கு 1 மில்லயன் மைல் வேகத்தில் மர்ம பொருள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மர்மப் பொருள்

காலங்காலமாக மனிதர்கள் விண்வெளியின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வத்துடன் செயலாற்றி வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி அந்த தேடுதலுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

விண்வெளியில் நடக்கும் வினோதம் - மணிக்கு 1 மில்லயன் மைல் வேகம் நகரும் மர்மப் பொருள்! | Mysterious Object Moving In Space At 1Milion Speed

அந்த வகையில், உலகின் மிக மேம்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக1 மில்லயன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது.

வெடித்து சிதறிய செயற்கைகோள் - சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?

வெடித்து சிதறிய செயற்கைகோள் - சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?

விண்வெளி..

பால் வெளியை வீட்டு இந்த பொருளானது நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த மர்ம பொருளானது பிளான்ட் 9 என்று திட்டத்தின்கீழ் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

விண்வெளியில் நடக்கும் வினோதம் - மணிக்கு 1 மில்லயன் மைல் வேகம் நகரும் மர்மப் பொருள்! | Mysterious Object Moving In Space At 1Milion Speed

ஆகாயத்தை இன்பிராரெட் ஒளியின் வழியாக ஆராய்ந்த இந்த மர்ம பொருள் விஞ்ஞானிகள் கவனத்துக்கு வந்துள்ளது. ஆனால், இதை விண்களாகவோ நட்சத்திரமாகவோ உறுதியாக வகைப்படுத்த முடியவில்லை. இந்த பொருளின் மையத்தில் ஹட்ரஜன் காணப்படவில்லை.

எனவே இதை வாயு நிறைந்த ராட்சத கிரகம் மற்றும் றைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டு வகைக்கு இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.