Thursday, Jul 24, 2025

வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்; திடீரென அனலை கக்கும் பள்ளம் - பீதியில் மக்கள்!

Tamil nadu Tirupathur
By Swetha a year ago
Report

வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்து 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

விழுந்த மர்ம பொருள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலத்தில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. ராஜி என்பவரின் நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகியுள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார்.

வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்; திடீரென அனலை கக்கும் பள்ளம் - பீதியில் மக்கள்! | Mysterious Object Fell In Tirupathur

ஆனால், அது ஏதோ சாதாரண பள்ளம் என நினைத்து கடந்து சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், மீண்டும் அதே இடத்திற்கு சென்ற திருமலை அங்கு இருந்த பள்ளத்தை பார்க்கும்போது அதிலிருந்து அதிக வெப்ப அனல் வெளியாகியுள்ளது. 

ஆளுநர் மாளிகையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் - பதறிப்போன பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள்!

ஆளுநர் மாளிகையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் - பதறிப்போன பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள்!

அனலை கக்கும் பள்ளம்

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி அறிந்து அச்சமடைந்த மக்கள் பள்ளத்தின் முன்பு குவிந்து, அந்த மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் பீதி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர். 

வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்; திடீரென அனலை கக்கும் பள்ளம் - பீதியில் மக்கள்! | Mysterious Object Fell In Tirupathur

இந்த தகவலறிந்து நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக வைக்க கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.