பிணங்களை கிழித்து தின்னும் அதிபயங்கரமான அகோரிகளின் திகிலூட்டக்கூடிய மர்மமான வாழ்க்கைமுறை!
அகோரிகளின் வாழ்க்கைமுறை என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். அதே சமயம் அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் விசித்திரமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட அகோரிகளின் அன்றாட வாழ்க்கையை நம்மால் ஒருநாள் கூட வாழ முடியாது.
அவர்களிடம் ஒரு சில அருவருக்கத்தக்க மற்றும் விரும்பத்தகாத நடைமுறைகள் மிகவும் விசித்திரமாக இருக்கும். இந்த வாழ்க்கைமுறையினால்தான் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுகிறார்கள்.
இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கூட அகோரிகளின் சில நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவது கிடையாது. ஏனெனில், அகோரிகளின் இறை வழிபாட்டு முறைகள் சாதாரண மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இருந்தாலும், அகோரிகள் மற்றவர்களால் வணங்கப்படுகிறார்கள். அகோரிகள் ஒரு விசித்திரமான பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று, பிணங்களை சாப்பிடுதல்.
அகோரிகள் ஏன் பிணங்களை சாப்பிடுகிறார்கள்? என்ன காரணம்?
எதனால் அவர்களின் வாழ்க்கை முறை இப்படி இருக்கிறது என்று விரிவாக பார்ப்போம் - அகோரிகளின் அருவருக்கத்தக்க செயல்களில் மிக முக்கியமானது -
தூக்கி வீசப்பட்ட பிணங்களின் மாமிசத்தை சாப்பிடுதல், சிறுநீரை குடித்தல். மண்டை ஓட்டில் இருக்கும் கழிவுகளை சாப்பிடுதல்.
விசித்திரமான அகோரிகளின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கும்ன்னு தெரியுமா? அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்
- 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபா கினாராம் என்ற புகழ்பெற்ற அகோரி ஏற்றுக் கொண்ட வழிகளிலிருந்து இவர்கள் இந்த நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்கள் என்று அகோரிகள் கூறுகின்றனர்.
- இறந்த மனித உடல்கள் பெரும்பாலானவை தகனம் செய்யப்படும். அதில், எஞ்சியுள்ளவை கங்கை ஆற்றில் வீசப்பட்டாலும், சில அப்புறப்படுத்தப்படுகின்றன. இதுபோல், அப்புறப்படுத்தப்பட்ட சடலங்களை வைத்திருப்பதில் அகோரி துறவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்களாம்.
- அகோரிகள் பெரும்பாலும் அழுகிய பிணங்களை பல விசித்திரமான வழிகளில் பயன்படுத்துவார்கள். அகோரிகள் அழுகிய பிணங்களின் உடல்களின் மீது உட்கார்ந்து தியானத்தில் ஈடுபடுவார்களாம்.
- அதுமட்டுமல்லாமல், பிணங்களின் உடல்களை இருக்கைகளாகப் பயன்படுத்துவார்கள்ம். மேலும், பிணங்களின் மாமிசத்தைக் கிழித்து சாப்பிடுவார்கள்.
- பிணங்களின் உடல்களில் உள்ள எலும்புகளை உரித்து, தங்கள் வீடுகளில் தொங்க விடுவார்கள். பிணங்களின் மண்டை ஓட்டை வெளியே எடுத்து மாலையாக அணிந்து கொள்வார்கள்.
- உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ள கிண்ணங்களாகவும் மண்டை ஓட்டை அகோரிகள் பயன்படுத்துவார்களாம்.
- அகோரி துறவிகள் கடினமான ஆத்மாக்கள் ஆவர். இவர்களின் தேவை மிகவும் குறைவுதான். இவர்கள் உணவுக்காக பிச்சை எடுக்க மாட்டார்கள்.
- ஒதுக்கப்படும் சடலங்களில் இருந்து தனக்கான உணவைப் பெற்றுக் கொள்வார்கள். அகோரிகள் உடல் முழுவதும் அழுக்கு மற்றும் சாம்பலை பூசிக்கொண்டு காண்பதற்கு விரும்பத்தகாதவர்களாக காட்சி அளிப்பார்கள்.
- வாழ்க்கையில் எதைப் பற்றியும் அவர்களுக்கு கொஞ்சமும் பயம் இருக்காது.
- அவர்கள் சிரிப்பது, அழுவது, கத்துவது மற்றும் வித்தியாசமான கருத்துக்களை கூறுவது என்று அவர்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.
- நம்பிக்கை கொண்ட மக்கள் அகோரிகள் சொல்வதை ஆர்வத்துடன் கவனித்து, அவர்களின் கருத்துக்கள் சில எதிர்கால நிகழ்வுகள் அல்லது வாழ்க்கையின் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன என்று கருதுகின்றனர்.
- அகோரிகள் துறவறத்தின் கடுமையான பாதையில் இருப்பவர்கள். உலகின் அனைத்து பொருட்களின் செல்வங்கள் மற்றும் உடமைகளை அவை நிலையற்றவை மற்றும் ஏமாற்றுவதாகக் கருதுகிறார்கள்.
- உலகின் பிடியிலிருந்து மற்றும் அடிமைத் தனங்களிலிருந்து தப்பித்து அறிவொளியை அடைவதற்கான அவர்களின் முயற்சி செய்பவர்கள்.
- உலகின் ஏமாற்றும் விஷயம் மற்றும் பிணைப்பு களிலிருந்து தங்கள் உடலையும் மனதையும் பிரிக்கும் பாதையை அவர்கள் எடுத்துள்ளனர்.
- உடல் ஆன்மாவை உள்ளடக்கியது மற்றும் காலத்துடன் அதன் மரணத்தை எதிர்கொள்கிறது.
- ஆத்மா அதன் தற்போதைய உடலை விட்டு வெளியேறிய பிறகு இன்னொரு உடலைக் கண்டுபிடிக்க வேண்டும்.
- பூமிக்குரிய வாழ்க்கைக்கு மனிதர்களை பிணைக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று உடலுடன் இணைந்திருப்பது என்றாலும், அழுகிய மாமிசத்தை சாப்பிடுவது மற்றும் தகனம் அல்லது புதை குழிகளில் வாழ்வது உள்ளிட்ட மிகவும் விரும்பத்தகாத சில வழிகளில் அதை இணைப்பதன் மூலம் உறுதியான வழியைக் கடக்க முடியும் என்று அகோரிகள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.