ஆண்ட்ரியாவின் நிர்வாண ஃபோட்டோ ஷூட்; நான் பாதியில் வெளியே வந்து..ரகசியத்தை சொன்ன மிஷ்கின்!
நடிகை ஆண்ட்ரியா குறித்து இயக்குநர் மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டி உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் மிஷ்கின்.அதுமட்டுமில்லாமல் சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், மாவீரன், லியோ, வணங்கான் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாட்டல் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார். அப்போது பேசியவர்,’’ பிசாசு முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன் பிறகு பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க வைக்க முடிவு செய்து அதற்கான ஃபோட்டோ ஷூட் எடுக்க ஏற்பாடு செய்தேன். அந்த ஃபோட்டோ ஷூட் நடக்கும் போது நான் பாதியில் வெளியே வந்து சிகரெட் பிடித்துவிட்டு எனது ஆஃபிஸுக்கு வந்துவிட்டதாகக் கூறினார்.
இயக்குநர் மிஷ்கின்
பிறகு ஆண்ட்ரியாவிடம் ஃபோன் செய்து, உனது நிர்வாண போஸை நான் படத்தின் போஸ்டரில் வைத்தேன் என்றால்; எல்லோரும் என்னைப் போல் அந்த நிர்வாணத்தை இலக்கிய நயத்தோடும், தாய்மை உணர்வோடும் பார்ப்பார்களா என்று தெரியாது.

அதனால் இது வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகக் கூறினார்.தொடர்ந்து பேசியவர் அந்த நிர்வாண போஸை பயன்படுத்தியிருந்தால் படத்துக்கு கூட்டமும் வந்திருக்கும். படமும் வெளியாகியிருக்கும். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை என்று கூறினார்.
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil