செக்ஸ் புக் படிச்சு அம்மாட்ட மாட்டினேன்.. ஆனா அவங்க..! மிஷ்கின் ஓபன் டாக்!
அம்மாவை அப்போ ரொம்ப நாகரிகமா பார்த்தேன் என மிஷ்கின் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் எளிய காட்சிகள், கதைகளம் மூலம் தனித்துவமாக அறியப்பட்டவர். இவரது படம் என்றாலே தனியாக கண்டுபிடிக்கலாம். இவரது சினிமாக்கள் தனித்து தெரிவதற்கு காரணம் இவரது வாசிப்பு.

தமிழ் மட்டுமின்றி உலக இலக்கியங்களை வாசிக்கும் இவரால் உணர்வுகளை ஆழமாக கடத்த முடிகிறது. அதே போல இவரது பேச்சுக்களும் கேட்பதற்கு அவ்வளவு ஸ்வாரஸ்யமாக இருக்கும். இந்நிலையில், சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார் மிஷ்கின்.
செக்ஸ் புக் மூணுமே..
அதில், "நான் ஒரு முறை ஸ்கூல் படிக்குற காலத்துல ஒரு 3 செக்ஸ் புக் வச்சு படிச்சிட்டு இருந்தேன். பக்கா செக்ஸ் புக் மூணுமே… அதை நான் என் டேபிள்ல வச்சு படிச்சுட்டு இருக்குறப்போ எங்க அம்மா வந்துட்டாங்க.

உடனே அதை டேபிளுக்கு கீழ தள்ளி விட்டுட்டேன். அப்பாடான்னு அத அங்கேயே வச்சுட்டு உடனே வெளில கிரிக்கெட் விளையாட போய்ட்டேன். எங்கம்மா வீட்டை சுத்தம் செஞ்சி, கூட்டி பெருக்கிட்டு இருப்பாங்க போல. நான் திரும்பி வந்து பாக்குறேன்,
பிசாசு 2
அந்த மூணு செக்ஸ் புக்கையும் எங்க அம்மா எடுத்து டேபிள் மேல கார்னர்ல அழகா அடுக்கி வச்சுருக்காங்க. என் வாழ்வில் சிறந்த நாள் அது. அப்போ எங்க அம்மாவை நான் ரொம்ப நாகரிகமா பாத்தேன்", என்று கூறினார்.
தற்போது இவர் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதில், ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜ்மல் உள்ளிட்டவர்களோடு விஜய் சேதுபதியும் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
சிறுமிகள் மீது அத்துமீறல் : இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவிற்கு அவுஸ்ரேலியாவில் 13 வருட சிறை IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil