ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சி - மிஸ்கின் எடுத்த திடீர் முடிவு!

Andrea Jeremiah Only Kollywood Mysskin
By Sumathi Aug 09, 2022 07:50 AM GMT
Report

பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சிகளை இயக்குநர் மிஷ்கின் அதிரடியாக நீக்கி உள்ளார்.

ஆண்ட்ரியா

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ளது பிசாசு 2. பாலா தயாரிப்பில் வெளியான பிசாசு 1 பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் பிசாசு பாகம் 2 பட வேலைகளில் இறங்கினார்.

ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சி - மிஸ்கின் எடுத்த திடீர் முடிவு! | Mysskin Removed Nude Scene Of Andrea Jeremiah

முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்க, அவருடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

பிசாசு 2 

பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சி - மிஸ்கின் எடுத்த திடீர் முடிவு! | Mysskin Removed Nude Scene Of Andrea Jeremiah

இப்படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததாகவும் கதைக்கு தேவை என்பதால் ஒரு காட்சியில் அப்படி நடிக்க வேண்டி இருந்ததாகவும் ஏற்கெனவே பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆண்ட்ரியா.

மிஸ்கின் முடிவு

முதலில் தயக்கம் இருந்ததாகவும், பின்னர் கட்டாயப்படுத்தினார்கள், கதைக்கும் தேவை என்பதால் நடித்தேன். அதில் வருத்தமில்லை என்றார். இது குறித்து பேசிய மிஸ்கினும். கதைக்கு தேவை என்பதால் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்தார் என்றார்.

இந்நிலையில் வெளிவர இருக்கும் பிசாசு 2 படத்தில் இருந்து ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சி நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மிஷ்கினே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.