நான் பெண்ணாக இருந்திருந்தால்...மம்மூட்டியுடன் உறவு கொண்டிருப்பேன் - மிஷ்கின் அதிரடி!

Mammootty Mysskin
By Karthick Jun 21, 2024 03:53 PM GMT
Report

நடிகர் இயக்குனர் என தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார் மிஷ்கின்.

மிஷ்கின்

தற்போது நடிகராக கலக்கி வரும் இயக்குனர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உண்டாக்கி கொண்டுள்ளவர். 2006-ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு என வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார்.

Director Mysskin

இயக்குனராக பிஸியாக இருந்த நேரத்திலேயே நடிகனாக தானே இயக்கி நந்தலாலா படத்தில் ரசிகர்களை கவர்ந்தார். அப்படத்தை தொடர்ந்து அவருக்கு நடிகராக அடுத்தடுத்த வாய்ப்புகளும் வர துவங்கின. மீண்டும் தானே இயக்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும், தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார்.

பாவனாவுடன் உறவில் இருந்ததே...மகிழ்ச்சியான தருணம்..உளறிய மிஷ்கின்

பாவனாவுடன் உறவில் இருந்ததே...மகிழ்ச்சியான தருணம்..உளறிய மிஷ்கின்

மம்மூட்டியுடன் 

சிறந்த நடிகர் இயக்குனர் என்றே பெயரை பெற்றுள்ள போதும், சர்ச்சை கருத்திற்கும் அவர் பிரபலமே விஷாலுடன் ஏற்பட்ட மோதலில் அவரை குறித்து மிஷ்கின் பேசியதை தமிழ் திரை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது  அப்படி ஒரு பழைய சம்பவம் மீண்டும் வைரலாகியுள்ளது.

actor mamootty

மலையாள நடிகர் மம்மூட்டி ராம் இயக்கிய பேரன்பு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்பட நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவரை கற்பழித்திருப்பேன் என வெளிப்படையாக பேசினார். மீண்டும் பேசியவர் அவரை காதலித்திருப்பேன் என கூற இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது.