விஜய்க்கு ஏன் அந்த இடத்தில் முத்தம்?.. விளக்கம் கொடுத்த பிரபலம்!
நடிகர் விஜய்க்கு முத்தம் கொடுத்தது குறித்து பிரபலம் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இயக்குனர்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்குவதில் பெயர்போனவர் இயக்குனர் மிஸ்கின். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் தொடர்ந்து தனது வித்தியாசமான படங்களால் ரசிகர்களை ஈர்த்தவர். தற்பொழுது இவர் லியோ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
மேலும், அவரது சகோதரர் ஆதித்யா இயக்கும் படமான டெவில் படத்தில்தான் மிஷ்கி இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். அந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இவர் பேசினார்.
பேட்டி
இந்நிலையில், இசைவெளியீட்டு விழா முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மிஸ்கின், "என்னை அனைவருமே நான் பணிவில்லாதவன் என்றுதான் சொல்வார்கள். இப்போது நான் பணிவுடன் இருக்கிறேன் என்று சொல்லியிருப்பது உண்மையிலேயே எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய கரியர் தொடங்கியது யூத் படத்திலிருந்துதான்.
அப்போது என் தம்பி விஜய் என்னை ஒரு அண்ணன்போல் பார்த்துக்கொண்டார். இன்றும் அப்படித்தான் இருக்கிறார். மகா கலைஞன் நல்ல மனிதன். அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு கையை பிடித்து தலைவணங்கிதான் முத்தத்தை கொடுக்க வேண்டும். அவர் நிச்சயம் ஒரு மகா கலைஞனே. என் தம்பிக்கு நான் பணிவுடன் முத்தம் கொடுத்தது எனக்கு சந்தோஷம்தான்.
நான் அந்த விழாவில் சொல்லியது போல் விஜய் கண்டிப்பாக பெரிய லெஜண்ட்தான். அந்த லெஜண்டுக்கு நான் முத்தம் கொடுத்தது அவ்வளவு விமர்சனத்துக்குரிய ஒன்றா என்று தெரியவில்லை. எனது மனதிலிருந்துதான் எல்லாவற்றையும் செய்வேன். அறிவிலிருந்து எதையும் செய்யமாட்டேன். அறிவிலிருந்து சினிமா மட்டும்தான் எடுக்க முடியும்" என்று கூறியுள்ளார்.