என் மனைவி மாதிரியே நீங்க... லியோ பட நடிகையிடம் கூறிய விஜய்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
பிக் பாஸ் ஜனனி, நடிகர் விஜய் குறித்து கூறிய தகவல் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான படம் லியோ. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையே பெற்றது. தொடர்ந்து சமீபத்தில் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.
இதில் பிக்பாஸ் ஜனனி நடித்திருந்தார். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் இவர். பிக்பாஸ் 6 மூலம் பிரபலமானார். குறுகிய காலத்தில் விஜய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அடித்த ஜாக்பாட் என்றே கூறலாம்.
ஜனனி தகவல்
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் வந்து பேசும் போது, தனது பேச்சை பார்த்து விட்டு, என் வைஃப் அவரோட சிஸ்டர்ஸ் மாதிரியே பேசுறீங்க. என் வைஃப்பும் ஜாஃப்னா தான் தெரியுமா? என்றார்.
செம சைலன்ட்டாக இருப்பார். ரொம்ப அமைதியா பேசுவார்.
அடடா என்னைப் போலவே என்னோட தளபதியும் இருக்காரே என நினைச்சு ரொம்பவே ஜாலியா இருந்துச்சு எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.