தமன்னா விவகாரம் - சூடுபிடித்த மைசூர் சாண்டல் சோப்பு விற்பனை!
மைசூர் சாண்டல் சோப்பு விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
தமன்னா விவகாரம்
மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா பாட்டியாவை அச்சோப்பினைத் தயாரிக்கும் கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிட்டர்ஜெண்ட் லிமிடட் (கேஎஸ்டிஎல்) நியமித்தது.
அதனைத் தொடர்ந்து கன்னடப் பகுதியல்லாத நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்ததற்கு கடும் கண்டனங்களை சந்தித்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலும், இந்த பிராண்ட் ₹186 கோடி விற்பனை செய்து, ஒரே மாதத்தில் மிக உயர்ந்த விற்பனை சாதனையைப் பதிவு செய்துள்ளது.
மைசூர் சாண்டல் விற்பனை
மே 2024 இல், KS&DL ₹186 கோடி விற்பனை செய்து, ₹150 கோடி என்ற இலக்கை விட 24% அதிகம் ஈட்டியுள்ளது. இதன் ஆண்டு வருவாய் ₹960 கோடியாக இருந்தது. 2024-25 நிதியாண்டில் இது கிட்டத்தட்ட இரு மடங்காகி ₹1,780 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் நிகர லாபம் ₹113 கோடியிலிருந்து ₹415 கோடியாக அதிகரித்துள்ளது.
தற்போது, இதன் விற்பனையில் 80% க்கும் மேல் தென் இந்தியாவில் இருந்து வருகிறது, இதில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள நிர்வாக இயக்குநர் பிரசாந்த் பி.கே.எம், தமன்னா விவகாரம், கர்நாடக மக்கள் மைசூர் சாண்டல் சோப்பு பிராண்டுடன் எந்த அளவுக்கு இன்னும் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.
இது அவர்களின் கலாச்சார மற்றும் மாநிலப் பெருமையின் ஒரு பகுதி. ஆனால் எல்லைகளைத் தாண்டி வளர்ந்தாலும், KS&DL தனது வேர்களை மறந்துவிடவில்லை. நாங்கள் இதை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கொண்டு செல்கிறோம். இதன் மூலம், பிராண்டின் தனித்துவத்தை இழக்காமல், அதனை மேலும் விரிவுபடுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.