"மைசூர்பாக்" பெயர் மாற்றம்; இனி ‛மைசூர் ஸ்ரீ' - என்ன காரணம் தெரியுமா?
மைசூர்பாக் திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஏவுகணைகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
அதில் பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தைக்கு முயன்றது.
மைசூர் ஸ்ரீ
இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. தற்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இந்நிலையில், உலக புகழ்பெற்ற இனிப்புகளில் ஒன்றாக ‛மைசூர் பாக்' பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‛மைசூர் பாக்' பெயர் என்பது ‛மைசூர் ஸ்ரீ' என மாற்றபட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதும்போது Pak என்று பாகிஸ்தானை குறிக்கும் வகையில் உள்ளதாக கருதி, ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்வீட் கடை விற்பனை செய்து வருகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.