பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் யூடியூபர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் யூடியூபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு வேலை
இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அஹ்சன்-உர்-ரஹீம் எனப்படும் டேனிஷ் இந்தியாவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார்.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி பெண் யூடியூபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண், Travel With Jo என்ற பயணம் தொடர்பான யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வீடியோ எடுத்து அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானுக்கு 3 முறை சென்றுள்ள அவர், அங்குள்ள பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசியதும், அவர்களோடு தொடர்பில் இருந்து கொண்டு இந்தியாவில் இருந்து முக்கிய தகவல்களை உளவு பார்த்து அவர்களோடு பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்தது.
தூதரக அதிகாரியுடன் நெருக்கம்
மேலும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகன் மர்யம் நவாஸை சந்தித்து பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதி பகிர்ந்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரியுடன் நெருக்கமாக இருந்த இவர், அவருடன் பாலி தீவிற்கு சென்று வந்துள்ளார்.
இதனையடுத்து, டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்து கொண்ட அவர், அங்குள்ள தூதரக அதிகாரி எஹ்சன்-உர்-ரஹிம் உடன் மிகவும் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்.
மேலும், அவரை அங்கிருந்த மற்ற அதிகாரிகளுக்கும் ரஹீம் அறிமுகம் செய்து வைத்தார். இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மற்ற 5 பேரும் இதே போல், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, இங்கிருந்த ராணுவ தளங்களின் புகைப்படங்களை அனுப்பி பணம் பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
