விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வருவதில்லை.. காரணமே இதுதான் - மைனா நந்தினி ஓபன்டாக்!
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளாதது குறித்து மைனா நந்தினி பேசியுள்ளார்.
மைனா நந்தினி
பிக்பாஸ் வருவதற்கு முன்னரே மைனா நந்தினி பிரபலமானவர் தான், பல படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் தான் மைனா என்று அழைக்கப்பட்டார்.
2019ல் நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு துருவ் என்ற ஆண் குழந்தை உள்ளது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார். சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மைனா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், ஆரம்பத்தில் டிவி சேனல்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். இப்போது அது மூலமாக எனக்கு பல பெரிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய கனவை நோக்கி தான் நான் பயணிக்க முடியும்.
பட வாய்ப்பு
அதனால்தான் நான் என்னுடைய அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறேன். எனக்கு யாரோடும் கருத்து வேறுபாடு கிடையாது. அதுபோல டிவி நிகழ்ச்சிகளில் என்னை கூப்பிடாமல் தவிர்க்கலாம் இல்லை. நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடுகிறார்கள்.
ஆனால் என்னால் இப்போது அங்கு முன்பு போல போக முடியவில்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மற்றும் வெப் சீரிஸில் என்னுடைய கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறேன்.
அதனால் அது நோக்கி என்னுடைய பயணம் இருக்கிறது. வேறு எதுவும் இல்லை. என்னை பற்றி சில வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது. ஆனால் அதுவெல்லாம் உண்மை கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.