மைனா நந்தினியின் உருவத்தை மோசமாக விமர்சித்தவரை எச்சரித்த கணவர் – மன்னிப்பு கேட்ட யூடியூபர்...!
மைனாவின் உருவத்தை மோசமாக விமர்சித்தவரை கணவர் எச்சரித்ததையடுத்து யூடியூபர் குடும்பத்தோடு மன்னிப்பு கேட்டுள்ளார்.
டாஸ்க்கில் வென்ற மைனா
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்க் கொடுத்தார்.
அப்போது, அந்த டாஸ்கில் டயப்பரின் மூலம் அதிக நீரை சேகரிப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்த டாஸ்கில் ரட்சிதா, அமுதவாணன், மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். இதில் மைனா நந்தினி வெற்றி பெற்றார். இதனால், இந்த வாரம் எலிமினேஷனிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார்.
உருவ கேலி
ஒரு யூடியூப் சேனலில் இந்த டாஸ்க்கில் டயப்பர் அணிந்து விளையாடிய மைனா நந்தினியை உருவாக்கேலி செய்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
எச்சரித்த கணவர் யோகேஸ்வரன்
இந்நிலையில், சமீபத்தில் மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் பேசுகையில், தன் மனைவியை உருவக்கேலி செய்த சேனலை கண்டித்து பேசினார்.
யோகேஷ் பேசுகையில்,
பிக்பாஸ் டாஸ்கில் மைனா நந்தினி டயப்பர் அணிந்து விளையாடியதை பல யூடியூப் சேனல்கள் விமர்சனம் செய்து வருகிறது. பிக்பாஸ் என்றாலே போட்டியாளர்களின் மீது விமர்சங்கள் வரத்தான் செய்யும். ஆனால், ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் மைனா நந்தினியின் உடலை கேலி செய்து பேசுகிறது.
அசீம், விக்ரமனுக்கு மட்டும் ஏதாவது ஒரு பிரச்னை என்றால் மக்கள் அவர்களுக்கு சாதகமாக குரல் கொடுக்கிறார்கள். ஆனால், என் மனைவியை இப்படி உருவாக்கேலி செய்யும் போது யாரும் தட்டி கேள்வி கேட்கவில்லை.
உங்களுடைய வீட்டில் ஒருவரை இப்படி பேசியிருந்தால் உங்களுக்கு எவ்வளவு மன வருத்தம் இருக்கும். நான் நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் அந்த சேனலுக்கு “ஸ்டிரைக்” கொடுத்திருப்பேன். நான் செய்யவில்லை. இதற்கு பிறகாவது யாருக்குமே அவர் அப்படி செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம் என்றார்.
மன்னிப்பு கேட்ட யூடியூப்பர்
இந்நிலையில், மைனா நந்தினியை உருவக்கேலி குறித்து பேசிய யூடியூப் சேனல் தற்போது மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.