நடுரோட்டில் கணவருக்கு நடந்த அவலம்; பதறிப்போன மைனா நந்தினி -நடந்தது என்ன?
மைனா நந்தினியின் கணவரை ஒரு மர்மகும்பல் அடித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
கணவருக்கு அவலம்
விஜய் டிவி பிரபலம் மைனா நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதை தொடர்ந்து, பல தொடர்களில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மக்களவை மகிழ்வித்தார். மேலும் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ உட்பட சில திரைப்படங்களிலும் மைனா நடித்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஷ்வரனும் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென பைக்கில் வந்த இருவர் காரை வழிமறித்து மைனா கணவர் யோகேஷ்வரனுடன் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைனா நந்தினி
நந்தினியின் கார் தங்கள் பைக்கில் இடிப்பது போல வந்ததாக கூறி ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கைகலப்பில் முடிந்தது. இதனை பார்த்த அருகில் இருந்த மக்களில் சிலர் அவர்களை சமாதானப்படுத்தி வைத்தனர். சண்டை முடிந்து யோகேஸ்வரன் காரை ஸ்டார்ட் செய்தபோது,
அந்த கும்பலில் ஒருவர் மைனா அருகே வந்து ’ஹாப்பி பர்த்டே’ என்ற ஒரு பூவை கொடுத்தார். இது முழுக்க முழுக்க பிராங்க் என்பதற்காக செய்தது என்றும் கொஞ்சம் கோபம் கலந்த மகிழ்ச்சியுடன் மைனா, ‘ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க’ என்று கூறிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தற்போது வைரலாகியுள்ளது.