கபாலீஸ்வரர் கோவில் முன் தீ வைத்தவர் கைது - என்ன காரணம்?

Chennai Crime
By Sumathi Feb 13, 2024 08:21 AM GMT
Report

கோவில் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில் வாசலில் தீ வைப்பு

சென்னையில் மிக பிரபலமான கோவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரார். இங்கு கோவிலின் ராஜகோப்புர முன்வாசலில் மர்ம நபர் ஒருவர் மது போதையில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

தீனதயாளன்

உடனே, கோவிலின் முன்பு தீ எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. தொடர்ந்து, கோவில் நிர்வாகம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்தனர். அதன் அடிப்படையில், துணை கமிஷனர் தலைமையில் போலீசார் கோவிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பழனி கோவில் கருவறை ஃபோட்டோ எப்படி பரவியது - விளாசிய உயர்நீதிமன்றம்!

பழனி கோவில் கருவறை ஃபோட்டோ எப்படி பரவியது - விளாசிய உயர்நீதிமன்றம்!

தீவிர விசாரணை

அதில், கோவில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருப்பது தெரியவந்தது. எனவே, அருகேயுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

kapaleeswarar temple

இந்நிலையில், அனகாபுத்தூரை சேர்ந்த தீனதயாளன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது வீட்டையே தீ வைத்து கொளுத்தியவர் என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.