கோவில் முன்பு ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த மனித தலை - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கோவில் முன்பு ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த மனித தலை இருந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த எழுவபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். பிரதீப்பின் மனைவி சந்திரிகா கர்நாடகாவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில், பிரதீப் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் பிரதீப்பை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரின் தலையை வெட்டி தனியாக எடுத்து, எழுவபள்ளி கிராமத்தில் இருக்கும் மாரியம்மன் கோவில் முன்பாக வைத்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
அந்த வழியாக வந்தவர்கள் தலை துண்டமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே பாகலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து அறிந்ததும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
பிரதீப்பின் தலையை கைப்பற்றி கைப்பற்றிய போலீசார், தலையில்லா உடலை தேடினர். அப்போது, அந்த கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் பிரதீப்பின் உடலை கண்டுபிடித்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக பிரதீப்பின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாகத் தான் இந்த படுகொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, பிரதீப்பை படு கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.